Friday, May 27, 2011

இந்தியாவில்2012ம் ஆண்டு இறுதிக்குள் 2.5 மில்லியன் நர்ஸ்கள் தேவை: அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அலீம்



EMAIL DETAILS CATEGORY: செய்திகள் PUBLISHED ON SATURDAY, 14 MAY 2011 13:57
இந்தியாவில், 2.5 மில்லியன் நர்ஸ்கள் தேவை 2012ம் ஆண்டு இறுதிக்குள், 500 பேருக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. என, திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அலீம் கூறினார்.





உலக செவிலியர் (நர்ஸ்) தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள், "கேக்' வெட்டி செவிலியர் தினத்தைக் கொண்டாடினர். செவிலியர் போதகர் ராஜேந்திரன் வரவேற்றார். செவிலியர் கண்காணிப்பாளர் லட்சுமி பிரபாவதி தலைமை வகித்தார்.திருச்சி கி.ஆ.பெ., விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், மருத்துவமனை கண்காணிப்பாளருமான (பொறுப்பு) டாக்டர் அலீம் பேசியதாவது:

உலகில் எத்தனையோ தொழில்கள் உள்ளன. இந்த நர்ஸ் தொழில் என்பது மிகவும் போற்றத்தக்கது. மனிதநேயம், அன்பு மிக அவசியம். இரண்டாவது உலகப் போரில், ஏராளமானோர் தங்களது உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்தனர்.
அப்போது, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலிய பெண்மணி ஆற்றிய தொண்டு மகத்தானது. உலகமே வியக்கும் வண்ணம் அவர் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது. அவரது சேவையை பாராட்டும் வகையில், அவரை நினைவு கூறும் வகையில் நாம் உலக செவிலியர் தினம் கொண்டாடுகிறோம்.

மருத்துவமனைகளில் டாக்டர்களின் பங்களிப்பை விட நர்ஸ்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நோயாளியின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். நமது மருத்துவமனையை பொருத்தவரை நர்ஸிங் துறையில் எந்த குறையும் இல்லை.
இந்தியாவில், 2.5 மில்லியன் நர்ஸ்கள் தேவை. 2012ம் ஆண்டு இறுதிக்குள், 500 பேருக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசும் ஏராளமான நர்ஸிங் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. மாணவியர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
இத்துறையில் வேலைவாய்ப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். மாணவியர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அலீம் பேசினார். முன்னதாக மெழுகுவர்த்தி ஏந்தி பயிற்சி நர்ஸ்கள் மற்றும் நர்ஸ்கள் பாட்டுப்பாடி, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், "கேக்' வெட்டி, ஒருவொருக்கொருவர் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். செவிலியர் போதகர் மரகதம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment