காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் : குடும்பநல அனைத்து அலுவலர்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010,02:41 IST
தினமலர்
திருச்சி: "தமிழக சுகாதாரத்துறை குடும்பநலத்துறை காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்' என திருச்சியில் நேற்று நடந்த குடும்பநல அனைத்து அலுவலர் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் தமிழ்நாடு குடும்ப நலத்துறை அனைத்து அலுவலர் கூட்டமைப்பின் முதல்மாநில மாநாடு நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது.
மாநாட்டின் துவக்கவிழாவில் குடும்பநலத்துறை இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார், மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் செல்வராணி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டில் டாக்டர் அலீம் பேசும்போது, ""சுகாதாரத்துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. சுகாதாரத்துறையை பொருத்தவரை குடும்ப நலத்துறை பணியாளர் பங்கு மகத்தானது. தமிழகத்தில் தான் கலைஞர் காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ் போன்ற மக்கள் உயிர் காக்கும் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.
மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவு 154ஐ ரத்து செய்துவிட்டு, குடும்ப நலத்துறையில் காலியாக காலியாக உள்ள வட்டார சுகாதார புள்ளியாளர், வட்டார விரிவாக்க கல்வியாளர் மற்றும் பண்டக காப்பாளர், ஓட்டுனர், திரைப்பட இயக்குனர், மக்கள் தொடர்பு அலுவலர், துணை செவிலியர், சுகாதார செவிலியர் ஆகிய பணியிடங்களை நிரப்பக்கோரி அரசை கேட்டுக் கொள்கிறோம்.சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பணியிடங்களில் காலாவதியான சுகாதார மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு, புத்தாக்க உத்தரவு வழங்கி ஆறு மாத காலமாக சம்பளம் பெறாத நிலைக்கு தீர்வுகண்டு, பதவி உயர்வுக்கான சம்பளம் வழங்க வேண்டும்.
சுகாதார மேற்பார்வையாளர் என்ற பெயரினை அரசு உத்தரவுப்படி பகுதி சுகாதார செவிலியர் என்ற பெயர் மாற்ற உத்தரவை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். பட்டப்படிப்பு முடித்த ஏ.என்.எம்.,களுக்கு மட்டும் பணிமூப்பிலிருந்து விதிவிலக்களித்து பயிற்சியின்றி எஸ்.ஹெச்.என்., பதவி உயர்வு அளிக்கவேண்டும்.ஊதிய உயர்வு மற்றும் சீருடைப்படி முரண்பாடுகளை களைந்து அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் சீருடைப்படி வழங்க வேண்டும். குடும்ப நலப்பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment