Sunday, November 6, 2011

செல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு?!

செல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு?!




செல்போனில் அதிக நேரம் பேசுவது ஆபத்து என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 2 நிமிடத்திற்கு மேல் பேசுபவர்களின் மூளையின் செல்கள் பாதிக்கப்படுள்ளதாக டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.

செல்போன்களுக்கான சிக்னல்களை அனுப்பும் பேஸ் ஸ்டேசன்களை பள்ளிக்கூட வளாகம் மற்றும் விளையாட்டு மைதனம் அருகே வைக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மூளை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியராக வேலை பார்க்கும் டாக்டர் எம்.எ. அலீம் செல்போன் ஆபத்து பற்றி தெரிவித்ததாவது,

செல்போனை அதிக நேரம் உபயோகிப்பது ஆபத்தாகும். அதுவும் 2 நிமிடத்திற்கு மேல் பேசினாலே மூளை மற்றும் அதன் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.

செல்போனில் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்க வீச்சுகளால் ஆபத்து காத்திருக்கிறது. இந்த கதிரியக்க வீச்சுக்கள் முதல் 60 சதவீதம் வரை தலைப்பகுதியில் உள்ள மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும். இதனால் அப்பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் மூளையின் செல்களும் பாதிக்கப்படும். இதனால் அல்சீமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படலாம்.

மேலும் இந்த செல்போன் கதிரியக்கங்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும்.

இதற்கான தீர்வு, முதலில் செல்போனில் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஹேண்ட் ஃப்ரி உபயோகித்து பேச வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

அதிக இரைச்சல் உள்ள இடத்தில் இருந்து கொண்டு பேசுவதும், ஒரு விதத்தில் மூளைக்கு ஆபத்து. சிறுவர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment