Sunday, November 6, 2011

அமரர் ஊர்தி சேவை; கலெக்டர் துவக்கம்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில், இலவச அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவை சங்கத் தலைவரும், மாவட்ட கலெக்டருமான ஜெயஸ்ரீ நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அமரர் ஊர்திகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் குறைந்த கட்டண சேவையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.இச்சேவையை முற்றிலும் இலவசமாக செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அமரர் ஊர்தியை திரம்ப பெற்று இவ்வூர்திகளை புதியதாக றவடிவமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருச்சி அரசு மருத்துவமனையில் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் செயல்படும் இலவச அமரர் ஊர்தி சேவையை மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, கொடியசைத்து துவக்கி வைத்து, பேசிதயவாது:ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட இரண்டு அமரர் ஊர்திகள் திரும்பப் பெற்று 15 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு, இந்த இலவச சேவை அளிக்கப்பட உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மேலும் 5 அமரர் ஊர்திகள் புறநகர் பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.பொதுமக்கள் இலவச டெலிஃபோன் எண்: 155377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அழைத்தால் முற்றிலும் இலவசமாக அரசு பொது மருத்துவமனையிலிருந்து தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கும் அவரவர் வீடு வரையிலோ அல்லது மயானம் வரையிலோ இச்சேவை வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன், துணை முதல்வர் டாக்டர் அலீம், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment