மருத்துவக்கல்வி துணை இயக்குனர் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010,01:01 IST
தினமலர்
திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறை துணை இயக்குனர் முத்துகுமாரசாமி வந்தார். சாதாரணமாக மருத்துவமனையை சுற்றி பார்ப்பது போல் அவர் எல்லா இடங்களையும் பார்வையிட்டார். நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், டாக்டர்களின் செயல்பாடுகள் குறித்தும், மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டார்.பொதுமக்களிடம் ஒருவர் குறைகேட்கிறார் என்பதையறிந்த மருத்துவமனை நிர்வாகிகள் ஒவ்வொருவராக ஆய்வு செய்த இடத்துக்கு வந்தனர்.
அரசு மருத்துவக்கல்லூரி டீன் கார்த்திகேயன், துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து ஒருமுறை மருத்துவமனையை துணை இயக்குனர் முத்துகுமாரசாமி ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆய்வு செய்த பின் முத்துகுமாரசாமி புறப்பட்டார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வசதிகள் எப்படியுள்ளது என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காகவே ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வு பற்றிய அறிக்கையை அரசிடம் அளிப்பேன்,'' என்றார்.
No comments:
Post a Comment