.திருச்சி மாவட்டத்திற்கு இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்பதிவு செய்த நேரம்:2013-12-31 10:43:22 தினகரன்
திருச்சி, : திருச்சியில் பச்சிளம் குழந்தைகளுக் கான சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவையை கலெக் டர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று துவக்கி வைத்தார்.
திருச்சி அரசு மருத்துவ மனை, மணப்பாறை அரசு மருத்துவமனைகளில் மட் டும், குறை பிரசவம் மற்றும் எடை குறைந்த குழந்தை களை பராமரிக்க இன்குபேட்டர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வசதிகள் உள் ளன. மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவ்வசதி இல்லை. இந்த குறையை போக்க சிறப்பு இன்குபேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இவ்வசதிகள் இல்லாத மருத்துவமனைக ளில் பிறக்கும் குழந்தைகளு க்கு, சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் இந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும். இதற் கென சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர் ஒருவர் இந்த ஆம்புலன்சில் இருப் பார். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 10 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. தற்போது 11வது சிறப்பு 108 ஆம்புலன்ஸ் திருச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இதற்கென நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவையை கலெக் டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத் தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் வள்ளிநாயகம், துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் ரவீந்திரன், 108 மாவட்ட மேலாளர்கள் பால் ராபின்சன், ரவி சங் கர், ஒருங்கிணைப்பாளர் கள் கண்ணன், சிவக்குமார், சுகாதாரப்பணிகள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப் பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ கூறியதாவது: பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகித்தை குறைக்கும் விதமாக இந்த வசதி உடைய ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிறந்த குழந்தைகளு க்கு இன்குபேட்டர் வசதி உட்பட அனைத்து வசதிக ளும் இந்த ஆம்புலன்சில் உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் திருச்சி அரசு மருத்துவ மனை வளாகத்தில் இருக் கும். இந்த ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என்று 108 தொடர்பு கொண்டு கேட் கும் அரசு மருத்துவமனைகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். திருச்சிக்கு 20 ஆம்புலன்ஸ்கள் இதேபோல பச்ச மலை பகுதிக்கென தனி யாக 108 ஆம்புலன்சும் வழங்கப்பட்டுள்ளது. டாப் செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப் பட்டிருக்கும். இந்த 2 ஆம்புலன்ஸ்களையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் இது வரை இருபது 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. |
Friday, April 18, 2014
.திருச்சி மாவட்டத்திற்கு இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment