Saturday, March 30, 2013

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஓய்வறை அமைச்சர் தகவல்

திருச்சி, :
Dinakaran 9/3/2013
திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக விரைவில் கட்டிட வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சை பிரிவு, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட சிகிச்சை பிரிவு போன்றவற்றை பார்வையிட்டார். நோயாளிகளி டம் மருத்துவ வசதிகள், டாக்டர்கள் மற் றும் ஊழியர்களின் அணுகு முறை குறித்து கேட்டறிந் தார். முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட சிகிச்சை பிரிவில் நோயாளியின் உறவினர் ஒருவர் அமைச்சரிடம் கூறுகையில், நோயாளிகளின் உறவினர்களுக்கு தங்க இடமின்றி மழை, வெயிலில் அவதிப்படுகின்றனர் என்றார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு முக்கி யத்துவம் அளிக்கப்படுகி றது. உங்களின் கருத்தையும் ஏற்று விரைவில் உறவினர்களுக்கு ஓய்வறை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் அவர், பெரிய மிளகுபாறையிலுள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி யில் டாக்டர்களுடன் ஆலோ சனை நடத்தினார். முன் னதாக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் அமைச் சர் வீரமணி வார்டு, வார் டாக ஆய்வு நடத்தி நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, முன்னாள் அமைச்சர் சிவ பதி, மருத்துவக்கல்வி இயக்குநர் வம்சதாரா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், மருத்துவக் கல்லூரி முதல் வர் டாக்டர் கார்த்திக்கே யன், கண்காணிப்பாளர் கனகசுந்தரம், இருக்கை மருத்துவர் சிவக்குமார், மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் டாக்டர் சேரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment