Friday, March 29, 2013

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நவீன மருத்துவ கருவிகள் அமைச்சர் பூனாட்சி தொடங்கி வைத்தார்

திருச்சி
Dinathanthi 18/3/2013

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நவீன மருத்துவ கருவிகளை அமைச்சர் பூனாட்சி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

மருத்துவ கருவிகள்

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்த அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் ஆணையின் பேரில் மருத்துவமனை வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கென பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் மதிப்பில் மூளை நரம்புகள் மற்றும் தசை தொடர்பான நோய்களை கண்டறியும் இ.இ.ஜி. மற்றும் இ.என்.எம்.ஜி. கருவிகள், ரூ.40 லட்சம் மதிப்பில் கண் நீர் அழுத்தம், நீரிழிவு நோயினால் கண் விழித்திரையில் ஏற்படும் குறைபாட்டினை நீக்குதல், தையல் இல்லா கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண் உட்புற நோய்களை கண்டறியும் கருவிகள், ரூ.25 லட்சம் மதிப்பில் வயிறு மற்றும் குடல் அக நோக்கி கருவி மற்றும் ஆசன பெருங்குடல் அக நோக்கி (எண்டாஸ்கோபி) கருவி மற்றும் 24 மணி நேரமும் இயங்க கூடிய ரூ.5 லட்சம் மதிப்பில் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி ரத்த பரிசோதனை கருவி உட்பட மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

அமைச்சர் பூனாட்சி

இந்த கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில்கள்துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி கலந்து கொண்டு மருத்துவ கருவிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. ப.குமார் எம்.பி, பரஞ்சோதி எம்.எல்.ஏ மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாநகராட்சி மேயர் ஜெயா, மாநகர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன், துணை மேயர் ஆசிக் மீரா, மாநகராட்சி கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், ஞானசேகரன், மாநகராட்சி உறுப்பினர்கள் ராஜா, சகாதேவ பாண்டியன், சகாதேவன் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன், உள்ளிருப்பு இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார், மூளை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் அலீம், வெல்லமண்டி பெருமாள், செல்வம் தலைமை நர்சு லீலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment