*திரு அருணை திருப்புகழ்.*
*முத்தைத்தரு பத்தித் திருநகை*
*அத்திக்கிறை சத்திச் சரவண*
*முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்*
*முக்கட்பர மற்குச் சுருதியின்*
*முற்பட்டது கற்பித் திருவரும்*
*முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்*
*பத்துத்தலை தத்தக் கணைதொடு*
*ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு*
*பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்*
*பத்தற்கிர தத்தைக் கடவிய*
*பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்*
*பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே*
*தித்தித்தெய ஒத்தப் பரிபுர*
*நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி*
*திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்*
*திக்குப்பரி அட்டப் பயிரவர்*
*தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு*
*சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்*
*கொத்துப்பறை கொட்டக் களமிசை*
*குக்குக்குகு குக்குக் குகுகுகு*
*குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை*
*கொட்புற்றெழ நட்பற் றவுணரை*
*வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி*
*குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.*
சண்முகப்பிரியா இராகம்
No comments:
Post a Comment