Saturday, August 24, 2019

மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ் 165 பேருக்கு ரூ.5லட்சம் கல்வி உதவிதொகை தமிழ்நாடு August 21, 2019

மாலைச்சுடர் | தேசிய தமிழ்

நாளிதழ் 165 பேருக்கு ரூ.5லட்சம் கல்வி உதவிதொகை

தமிழ்நாடு August 21, 2019

KirubaLeave A Comment On

165 பேருக்கு ரூ.5லட்சம் கல்வி உதவிதொகை திருச்சி, ஆக. 21:திருச்சி கலாம் பொதுநல சங்கம் சார்பில் 14 ஆம் ஆண்டு விழா, கல்வி நிதி மற்றும் மதநல்லிணக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 165 பேருக்கு ரூ 5 லட்சம் மதிப்பில் கல்வி உதவி தொகையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். திருச்சி நத்தர்வலி தர்காவில் இயங்கி வரும் கலாம் பொதுநல சங்கம் மற்றும் கலாம் டிரஸ்ட் சார்பில் 14 ஆம் ஆண்டு விழா, கல்வி நிதி மற்றும் மதநல்லிணக்க விழா என முப் பரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலாம் பொதுநல சங்கத்தின் தலைவர் சையத் ஜாகிர் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை மவ்லவி ஹாபிழ் அல்லாபக்ஷ் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் எஸ். சர்தார் ஷேக் பாவாதீன் வரவேற்று பேசினார்.சங்கத்தின் அமைப்பாளர் இம்தியாஸ் அஹமது, சங்கத்தின் துணை செயலாளர்கள் எம்.ஜி. சலீம், எம். அப்துல் அஜிஸ்,சம்சுதீன், எம். சாதிகுல் ஆமீன், ஜே.கே. வஜீர், சங்கத்தின் துணைத்தலைவர் முகம்மது ஜாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கலாம் டிரஸ்ட் சேர்மன் முஹம்மத் இஸ்ஹாக் சங்கம் மற்றும் டிரஸ்ட் செயல் பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சங்கத்தின் துணைத்தலைவர் எஎம்.கே.எஸ். ஜமால் பேசினார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கே.கே. மூஸா கோயா துவக்க உரை நிகழ்த்தினார். ஹஜ்ரத் நத்தர்வலி தர்கா அறங் காவலர்கள் ஹாஜா மைதீன், டாக்டர் அலீம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.எம்.எஸ். ஹக்கீம், கே. சின்னப்பன், ஹஜ்ரத் நத்தர்வலி பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு 165 பேருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் கல்வி உதவி தொகையை வழங்கி பேசினார். விழாவில் சங்கத்தின் ஆடிட்டர் ஏ.எஸ். ராமகிருஷ்ணன், ஹஜ்ரத் சான் மஸ்தான் தர்கா கமிட்டி செயலாளர் எம்.எச். ரஹீம், வெங்கடேசன், ஜே.எஸ்.எம். ஜமால், 12வது வட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் தர்கா காஜா, கேபிள் முஸ்தபா, அஜ்மல் கான், அப்துல் ரஷீத், புவனேஸ்வரி, கலாம் டிரஸ்டிகள் ஜவஹர் அஹமத், அலீஃப்லாம், தேசிய சிறுபான்மை கழகம் நிறுவன தலைவர் என்.எம். சதகத்துல்லா, எம். அக்பர் ஷரீஃப், சங்கத்தின் வழக்கறிஞர் என். சிவா மற்றும் ஜமாத் நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டார்கள். சங்கத்தின் பொருளாளர் என். அஸ்கர் அலி நன்றி கூறினார். Post navigation தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு RELATED POSTS ஈஸ்டர் திருநாள்: முதலமைச்சர் வாழ்த்து April 20, 2019 MS TEAM பிஜேபி தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை June 10, 2019 MS TEAM தேசிய மாணவர் படைக்கு ராணுவ பயிற்சி July 20, 2019 kiruba || Theme: Copy Right by Maalaisudar.

1 comment:

  1. Do you need Personal Loan?
    Business Cash Loan?
    Unsecured Loan
    Fast and Simple Loan?
    Quick Application Process?
    Approvals within 4 Hours?
    No Hidden Fees Loan?
    Funding in less than 72hrs
    Get unsecured working capital?
    Email us: fastloanoffer34@gmail.com
    Whats-app us on +918929509036

    ReplyDelete