Saturday, January 12, 2019

Garbage Disposal in Trichy City M.A.Aleem Neurologist Trichy Member Tiruchirappalli District Welfare Fund Committee

👉👉 திருச்சி        ;-          152 ஆண்டு குப்பைகளை அகற்றி 47 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை

திருச்சியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 152 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் இடமாக உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றி 47 ஏக்கர் நிலத்தை மீட்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
                                                                                                                                                                                                              திருச்சி மாநகராட்சியில் தற்போதயை நிலவரப்படி  9 லட்சத்து 84 ஆயிரத்து 833 மக்கள் தொகையும், 5,703 வர்த்த பயன்பாட்டு கட்டடங்களுடன் 2 லட்சத்து 33 ஆயிரத்து 947 குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 10 லட்சம் மக்கள், 2.33 லட்சம் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு அரியமங்கலம் குப்பை கிடங்கு மட்டுமே பிரதானமாக இருந்து வருகிறது.
                                                                                                                                                                                                     மலைபோல குவியும் குப்பைகள்:  மாநகராட்சியில் நாளொன்றுக்கு ஒவ்வொரு தனி நபரும் 421 கிராம் குப்பைகளை வெளியேற்றும் சூழல் உள்ளது. இதன்படி, மொத்தமாக 436 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் தேக்கப்படுகிறது. இதனால் அவ்வப்போது தீப் பற்றி எரிவதால் எழும் புகையால் சுற்றுப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு உபாதைகள் தொடர்கதையாக உள்ளது.
                                                                                                                                                                                                                    வந்தது தீர்வு:          மாநகராட்சி நிர்வாகத்தை மலைக்க வைக்கும் வகையில் உள்ள இந்த குப்பைக் கிடங்குக்கு பொலிவுறு நகரத்திட்டத்தால் தீர்வு வந்துள்ளது. முதல்கட்டமாக இங்கு குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. தரம் பிரித்து வாங்கப்படும் குப்பைகளை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு சென்று உரமாக மாற்றப்படுகிறது. அரியமங்கலத்தில் 7 ஏக்கரில் நுண்ணுயிர் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்காத குப்பைகளை பிரித்து சிமென்ட் ஆலைக்கு எரிபொருளுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் 350 டன் குப்பைகள் அழிக்கப்படுகிறது. 5 டன் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்து தெருவிளக்குகள், குடிநீர் மோட்டார் இயக்க பயன்படுத்தப்படுகிறது. அம்பேத்கர் நகரில் இந்த யூனிட் அமைந்துள்ளது. 2 டன் குப்பைகளில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்து மயான எரியூட்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கருமண்டபத்தில் இந்த யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் அரியமங்கலம் குப்பை கிடங்குக்கு குப்பைகள் செல்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
                                                                                                                                                                                                                  பயோ-லைனிங் முறை: இதன் தொடர்ச்சியாக 152 ஆண்டுகளாக மலைபோல தேங்கியுள்ள குப்பைகளையும் பயோ-லைனிங் முறையில் பிரித்து அகற்றப்படுகிறது. இந்த முறையில் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படும் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். எரிபொருளுக்கு பயன்படுத்தும் கழிவுகள் எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும். இவைத்தவிர நுண்ணுயிர் உரம் தயாரிப்பு, எரிவாயு உற்பத்தி, மின்சார உற்பத்தி என தேவைக்கேற்ப குப்பைகளை பயன்படுத்தி அரியமங்கலத்தில் குப்பைகளே இல்லாமல் செய்ய பணிகளை தொடங்கியுள்ளது மாநகராட்சி.
                                                                                                                                                                                           இதுதொடர்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது: மாநகரில் சேகரமாகும் 200 டன் குப்பைகள் நுண்ணுயிர் உர செயலாக்க மையங்களுக்கு அனுப்பி உரமாக்கப்படுகிறது. இதற்காக ரூ.15 கோடியில் 27 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அரியமங்கலம் குப்பைகளையும் முற்றிலும் அகற்றி 47 ஏக்கர் நிலத்தை பொலிவுறு நகரத்திட்ட பயன்பாட்டுக்கு கையகப்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

ரூ.1.55 லட்சம் அபராதம்
தெருக்களில் குப்பைகளை கொட்டும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் நடமாடும் வாகனம் இயக்கப்படுகிறது. மேலும், குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை ரூ.1.55 லட்சம்
அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குப்பையில் ஈட்டிய ரூ.1.94 கோடி
குப்பைகள் பிரித்து வழங்கும் திட்டம் தொடங்கிய ஓராண்டில் ரூ.1.94 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் முழுவதும் குப்பைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கே பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. I believed God has sent dr onokun to help people out from this horrible virus. i was diagnosis with hpv for 3 years, few months ago a friend introduced me to dr onokun and i only took his natural treatment for a week & 3 days, and i totally got cured with his herbal treatment. if you are suffering from hpv, you don't have to be roaming round dr onokun email is been attached to contact him on email: dronokunherbalcure@gmail.com

    ReplyDelete
  2. Do you need Personal Loan?
    Business Cash Loan?
    Unsecured Loan
    Fast and Simple Loan?
    Quick Application Process?
    Approvals within 4 Hours?
    No Hidden Fees Loan?
    Funding in less than 72hrs
    Get unsecured working capital?
    Email us: fastloanoffer34@gmail.com
    Whats-app us on +918929509036

    ReplyDelete
  3. I don't have time beating around the bush, instead I go straight to the point.... So to you doubters I ain't expecting you all to believe my testimony but only the few chosen ones by God. In a short summary, I'm here to tell the whole world that I recently got cured from my long term herpes disease, both the HSV1 and HSV2 through the assistance of Herbalist doctor Oyagu I pray God continually blesses Dr Oyagu in all he does, because he is indeed a very good, nice and powerful doctor. I’m cured of herpes disease at last! Wow I'm so much in great joy because I've never in my life believed herbs works, but meeting doctor Oyagu was an eye opener and he made me believe that herpes truly got a complete cure. I used the doctor's herbal medicine for just two weeks and I was totally cured from both my HSV1 and HSV2. I'm so excited. For help and assistance in getting rid of your herpes virus you can Call/WhatsApp doctor Oyagu on his telephone number: +2348101755322 or for more inquiries you can as well contact the doctor on EMAIL: oyaguherbalhome@gmail.com

    ReplyDelete