Wednesday, September 19, 2018

History of TRICHY kalaiarangam nicely given in nammatrichy the seat capacity is 1700

கலையரங்கம் தியேட்டர் திருமண மண்டபமானது 12.9.2018

திருச்சியில் இருந்த புகழ் பெற்ற சினிமா தியேட்டர்களில் ஒன்று கலையரங்கம். திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகிலுள்ள தியாகராஜ பாகவதர் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கலையரங்கம் மாவட்ட ஆட்சியரை பொறுப்பு தலைவராகக் கொண்ட மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிற்கு சொந்தமானதாகும்.

இந்த தியேட்டர் தவிர சிறிய கூட்ட அரங்கம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. 1962 ல் அப்போதைய திருச்சி ஆட்சியர் குலாம் முகமது பாஷா, கி.ஆ.பெ. விஸ்வநாதம்பிள்ளை ஆகியோரால் 642 ரூபாயில் தொடங்கப்பட்ட திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு,1975ல் அரசாங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.

இச்சங்கத்திற்கு 1962ல் தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் நிதி கிடைத்து அதன் நிதியிருப்பு பெருகியது. இந்நிதியைக் கொண்டு 1976ல் ஸ்ரீனிவாசன் என்ற கட்டட வல்லுனரின் ஆலோசனைப்படி, ஆயிரத்து 417 இருக்கைகளுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்ட ஏசி தியேட்டராக கலையரங்கம் கட்டப்பட்டது.

இந்த தியேட்டர் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. கடைசியாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் விடப்பட்டதில், வாடகை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து கலையரங்கம் தியேட்டர் தனது திரைப்பட பயணத்தை முடித்துக் கொண்டது.

திருமண மண்டபமாக மாற்ற திருச்சி கலெக்டர் ராசாமணி மற்றும் மாவட்ட நலப்பணி நிதிக்குழு முடிவு செய்தது. அதன்படி, கலையரங்கம் தியேட்டரை திருமணமண்டபமாக மாற்றும் பணி கடந்த பிப்ரவரி 5ம் தேதி தொடங்கியது.

ரூ.2 கோடியில் ஆயிரத்து 700 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான திருமண அரங்கம், வரவேற்பு கூடம், ஒரே நேரத்தில் 350 பேர் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் உணவுக்கூடம், மணமக்கள் அறைகள், விருந்தினர் தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் முற்றிலும் ஏசியுடன் கூடிய பிரமாண்ட திருமணமண்டபத்தை கடந்த 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். பெயருக்குக்கேற்ப இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடத்த முடியும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இம்மண்டபத்தை பயன்படுத்த முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நலப்பணிக்குழு பொருளாளர் சேவை கோவிந்தராஜன், உறுப்பினர் டாக்டர் ஜெயபால், வாழ்நாள் உறுப்பினர்கள் ராஜகோபால், டாக்டர் அலீம், சிவானி கல்விக்குழும தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related

அடையாளம் இழக்கும் திருச்சி கலையரங்கம் தியேட்டர்...June 20, 2017In "உள்ளூர் செய்திகள்"

திருச்சி கலையரங்கம் தியேட்டர் பிரமாண்ட திருமண மண்டபமாகிறது .February 5, 2018In "தமிழக செய்திகள்"

மாவட்ட நலப்பணி நிதிக்குழுவின் மரகத விழா கொண்டாட்டம்January 6, 2018In "திருச்சி"

No comments:

Post a Comment