உலக பார்வை தினம் கண் தான விழிப்புணர்வு மாரத்தான்திரளானோர் பங்கேற்புபதிவு செய்த நேரம்:2014-10-13 10:36:05திருச்சி, : உலக பார்வை தினத்தையொட்டி திருச்சி கிஆபெ விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி, ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார் பில் கண் தானம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் நடத்தப்பட்டது. இதில் மரு த்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள் ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். பார்வை தினத்தை முன் னிட்டு கண் தானம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்புணர்வு மாரத்தான் கிஆபெ விஸ்வநாதன் மருத் துவ கல்லூரியில் நேற்று துவங்கியது. மாரத்தானை ஜோசப் கண் மருத்துவ மனை துணை இயக்குநர் பிரதிபா, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவக் கண்காணிப்பாளர் கனகராஜ் ஆகி யோர் துவக்கிவைத்தனர். மத்திய பஸ் நிலையம் மற் றும் முக்கிய வீதிகள் வழி யாகச் சென்ற இந்த மாரத் தான் ஜோசப் கண் மருத்துவமனையை சென்றடைந் தது. இதில் மருத்துவக் கல் லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆண்கள் பிரி வில் கவின் முதலிடத்தை யும், பார்கவியான் 2ம் இடத்தையும், சவுந்தர் 3ம் இடத்தையும் வென்றதற் கான பரிசுகளை பெற்றனர். இதே போல், மாணவிகள் பிரிவில் சுஜாதா முதலிடத்தையும், சந்திரலேகா 2ம் இடத்தையும், அக்ஷயா 3ம் இடத்தையும் வென்றதற்கான பரிசுகளைப் பெற்றனர்.
ஆரோக்கியத்துக்கு மினி மாரத்தான் இதேபோல், தமிழ்நாடு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் நடத்தப்பட்டது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான பிரசாரம் இம்மாதம் 15ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி, திருச்சி ஒத்தக்கடை முத்தரையர் சிலையில் இருந்து நேற்று துவங்கிய மினி மாரத்தான் மேலப்புதூர், பாலக்கரை வழியாக சத்திரம் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. துவக்க விழாவுக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஷாஜஹான் கொடியசைத்து ஓட்டத்தைத் துவக்கிவைத்தார். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.7 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.5 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. |
Sunday, November 2, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment