Tuesday, October 15, 2013

.
திருச்சி கி.ஆ.பெ., அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புத்தூரில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில், 2005ம் ஆண்டிலிருந்து ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எய்ட்ஸ்க்கான மருத்துவ சிகிச்சை, 2004 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மையத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்மையத்தில், 6,427 பேர் ஏ.ஆர்.டி., மாத்திரையை உட்கொண்டும், தினமும், 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு வந்து செல்கின்றனர். 15 பணியாளர்களுடன், மூன்று பயிற்சி பெற்ற டாக்டர்கள் மற்றும் நான்கு ஆலோசகர்களுடன் இயங்கி வருகிறது. ஏ.ஆர்.டி., மையம் விரிவுபடுத்தப்பட்ட கட்டிட திறப்புவிழா நேற்று முன்தினம் நடந்தது.
அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார். அரசு தலைமை கொறடா மனோகரன், மாநகராட்சி மேயர் ஜெயா, எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, துணைமேயர் ஆசிக்மீரா, டி.ஆர்.ஓ., தர்ப்பகராஜ், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம், துணைமுதல்வர் டாக்டர் அலீம், மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

1 comment: