Tuesday, October 15, 2013

திருச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.20 லட்சத்தில் புதிய கட்டிடம்

திருச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.20 லட்சத்தில் புதிய கட்டிடம் 


திருச்சி,
திருச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார்.
எய்ட்ஸ் சிகிச்சை மையம் 
எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (எய்ட்ஸ் நோயாளிகள்) ஆதரவு அளித்து சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை மையம் (ஏ.ஆர்.டி.) திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2005–ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. மேலும் எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு இந்த மையத்தில் சந்தர்ப்பவாத நோய்கள் உள்ளதா என்றும் கண்டறியப்படுகிறது. தேவைப்படுபவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
ரூ.20 லட்சத்தில் கட்டிடம் 
எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆன காரணத்தினால் இந்த சிகிச்சை மையத்திற்கு ரூ.20 லட்சத்தில் தொண்டு நிறுவன உதவியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய மையத்தை அமைச்சர் டி.பி.பூனாட்சி திறந்து வைத்தார்.
அரசு தலைமை கொறடா மனோகரன், மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.க்கள் இந்திராகாந்தி, சந்திரசேகரன், துணை மேயர் மரியம் ஆசிக், கோட்ட தலைவர்கள் சீனிவாசன், ஞானசேகர், கவுன்சிலர் சகாதேவன், ஜெ. பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் ராமு, கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி டீன் வள்ளிநாயகம், துணை முதல்வர் டாக்டர் அலீம், ஏ.ஆர்.டி. மைய பொறுப்பாளர் டாக்டர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 comment: