நபிகள்_நாயகம் (ஸல்..)
முஸ்லிமல்லாதவர்கள் நபிகள் (ஸல்..) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, தவறான கருத்தை மாற்ற இது மட்டும் போதுமானது...
இஸ்லாத்தின் நபி முஹம்மதுவை தூதர் என்பதை சற்றே தள்ளி வைத்து பின்வரும் ஆளுமைகளைப் பாருங்கள்.
முஹம்மது யார் என்பதையும், மற்றும் அவர் ஏன் இவ்வளவு விவாதிக்கப்படுகிறார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்...
முஹம்மது என்ற அனாதை சிறுவன் முஹம்மது என்ற ஆடு மேய்ப்பன்
முஹம்மது என்ற எழுத படிக்க தெரியாதவர்
முஹம்மது என்ற இளைஞன்
முஹம்மது என்ற வணிகர்
முஹம்மது என்ற கணவர்
முஹம்மது என்ற நேர்மையானவர் முஹம்மது என்ற தத்துவவாதி
முஹம்மது என்ற சமூக சீர்திருத்தவாதி
முஹம்மது என்ற பெண் விடுதலையாளர் முஹம்மது என்ற அனாதைகள் பாதுகாவலர் முஹம்மது என்ற ஏழைகளின் பாதுகாவலர் முஹம்மது என்ற மனித உரிமை ஆர்வலர் முஹம்மது என்ற அடிமை விடிவிப்பாளர் முஹம்மது என்ற அகதி
முஹம்மது என்ற குடும்பத் தலைவர் முஹம்மது என்ற பிதாமகன் (தலைவன்) முஹம்மது என்ற சிப்பாய்
முஹம்மது என்ற இராஜதந்திரி
முஹம்மது என்ற போதை ஒழிப்பாளர் முஹம்மது என்ற நீதிபதி
முஹம்மது என்ற சட்ட வல்லுநர்
முஹம்மது என்ற தலைமை தளபதி முஹம்மது என்ற ஆட்சியாளர்
எல்லாவற்றிற்கும் மேலாக
#முஹம்மது என்ற ஒரு #மனிதன்
கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களின் கதை அல்ல. AD 571 இல் பிறந்தார் 632 இல் மறைந்தார்.
நவீன கால மனிதன்:
ஒரு மனித வாழ்க்கையில் பல நூற்றாண்டுகளாக செய்ய வேண்டிய காரியங்களை ஒரு மனித ஆயுள் காலத்திற்குள் செய்த பெரிய தீர்க்கதரிசி. அதுவும் மேற்கத்தியர்களின் வார்த்தைகளில் சொல்வதென்றால்...
நிரந்தர இராணுவம் இல்லாமல்,
ஒரு மெய்க்காப்பாளர் கூட இல்லாமல்,
அரச வாழ்வும் அரண்மனையும் இல்லாமல், நிலையான வருமானம் இல்லாமல்
ஒரு முன்னுதாரணம் ஆன ஆட்சியை நிறுவி நடைமுறைக்கு கொண்டு வந்தவர் என்று யாரையாவது ஆணையிட்டு சொல்ல முடியும் என்றால் அது முஹம்மது நபியை மட்டுமே சொல்ல முடியும்...
அந்த மனிதனைப் படிக்க முயற்சி செய்யுங்கள். முஹம்மது அனாதை சிறுவன் முதல் அரேபியாவின் ஆட்சியாளர் வரை நடந்த வழிகளைப் பார்த்தால், உண்மையான முஹம்மது யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்...
தாயின் காலடியில் சொர்க்கம் என்பதை கற்பித்த நபி !
பக்கத்து வீட்டுக்காரர் பசியுடன் இருந்தால் உங்கள் வயிறை நிரப்ப வேண்டாம் என்று உத்தரவிடுவதன் மூலம் அதில் சாதி பார்க்க வேண்டாம் என்று கற்பித்த நபி !
திருடியவர் என் மகள் பாத்திமா என்றாலும் கையை வெட்டுங்கள் என்று சொன்ன நீதியாளர் !
வெள்ளை நிற சல்மான் பாரிஸ்,
கருப்பு நிற பிலால் இருவரையும் அதே வரிசையில் வரிசைப்படுத்தியவர் !
இனவாதம் வேண்டாம் என்று உலகுக்கு கற்றுக் கொடுத்தவர் !
இறந்தது நம் மதத்தின் குழந்தைகள் அல்ல என்று தோழர் ஒருவர் சொன்னபோது குழந்தைகளுக்கு என்ன மதம் என்று தோழரை கடிந்தவர் !
பெற்றோரை "சீ" என்று இகழ்வாய் ஒரு வார்த்தை கூட சொல்லாதே என்றார் அன்பின் தூதர் !
மரணம் நெருங்கிய போதும் என் மக்கள்,
என் மக்கள் என்று மக்களை நினைத்து அழுத உன்னதமான ஈடு இணை இல்லாத தலைவர் !
உங்கள் கணவரை சபிக்க வேண்டாம்.
மேலும் மனைவியை பார்வையால் கூட சங்கடப்படுத்த வேண்டாம் என்று கற்றுக் கொடுத்த குடும்பத் தலைவர் !
தந்தையின் வியர்ப்பு குடும்பத்தின் ஆதாரம் என்று நினைவூட்டினார் தீர்க்கதரிசி !
ஒரு சவ ஊர்வலம் தங்களை கடந்து சென்றபோது எழுந்து நின்று மரியாதை செய்த நபியோடு, தோழர் ஒருவர் இது ஒரு முஸ்லிமின் சவ ஊர்வலம் அல்ல என்று நினைவூட்டிய போது அவரும் ஒரு மனிதன் தானே இன்று அந்த ஜனாசாவிற்கும் கண்ணியம் காட்டிய இறைத்தூதர் !
கணவன் உனக்கு தலாக் எனும் விவாகரத்து செய்யும் போது அவனிடமிருந்து உனக்கு திருப்திகரமான வாழ்க்கை அமையவில்லை என்றால், நீயும் திருப்பி அவனை விவாகரத்து செய்யலாம் என்று ஆண், பெண் இரு பாலருக்கும் சமநீதியை உறுதி ஆக்கிய நீதிமான் !
ஒருவரைக் கண்டு புன்னகைத்தால் அது புண்ணியம் என்றுரைத்தவர் !
எனக்கு என் மதம், உங்களுக்கு உங்கள் மதம். மற்ற மதத்தினரை கேலி செய்து பரிகசிக்க கூடாது என்று கண்டித்தவர் !
பெண்கள் என்றால் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று ஆரம்பத்திலேயே கற்றுத் தந்தவர் !
வழியில் தடையாக ஒரு முள்ளைக் கண்டாலும் அதை நீக்காமல் அந்த வழியில் முன்னே போகக் கூடாது என்று கற்றுத் தந்தவர் !
உலகிலேயே மிகவும் குறைவான செலவில் நடத்தப்படும் திருமணமே மிகச் சிறப்பான திருமணம் என்று சொல்லித்தந்த அண்ணல் !
கல்வி ஒரு விசுவாசியுடைய ஆகப்பெரிய செல்வம். அதை எங்கு தேடியாவது பெற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைவூட்டியவர் !
பெண்களின் பாதுகாப்பு தான் சமூகத்தின் அஸ்திவாரம். பெண்மக்கள் உள்ள குடும்பம் தான் உன்னதமான குடும்பம் என்று கற்றுத்தந்தவர் !
உன்னுடைய விரல்கள், நீ யார் என்பதை அறியும் அடையாளம் என்று சொல்லித் தந்தவர் !
அனாதை பிள்ளைகளின் முன்பாக தன் சொந்தப் பிள்ளைகளை கொஞ்சக் கூடாது என்று கற்றுத்தந்த காருண்யர் !
எத்தனையோ எழுதி முடித்தும்,
எத்தனையோ சொல்லி முடித்தும்
இன்னும் எனது வரிகள் நிறைவடையவில்லை. வார்த்தைகளுக்கு உள் அடங்காத தத்துவம். எனது நண்பருக்கு நன்றி முஹம்மது என்ற தனிநபரை பற்றி படிக்க தூண்டியதற்கு...
விடைபெறுகிறேன். மதவெறி பரப்பியும் நபியை நிந்தனை செய்துவரும் அந்த
ஜனக் கூட்டத்திற்கு சொல்லிக்கொள்கிறேன்.
மாற்று மதத்தவரே !
நீங்களும் அந்த மனிதனைப் பற்றி
படியுங்கள். இஸ்லாம் மதத்தினுடைய
உட்புறம் அறியாத முஸ்லிம் பெயர்
தாங்கிய பயங்கரவாதிகளின்
சிறையிலிருந்து இந்த மனித நேசரான
முஹம்மது நபியை விடுவியுங்கள்.
இந்த மனிதரைப் பற்றி நமது இந்திய
வேதங்களிலும் குறிப்பிடப்பட்டு
இருக்கிரார்களாம். நான் அதைப் பற்றி
கற்றுக்கொள்ளவில்லை.
சமஸ்கிருதத்தை அறிந்த வேத அறிஞர்கள்
உண்மையை கற்றுக் கொண்டு அதை
மறைக்காமல் உண்மையைச்
சொல்வார்களா ?
நாம் ஒவ்வொருவரும், இது போன்ற பதிவுகளை படித்து, பகிர்ந்து மாற்றுமத சகோதரர்களுக்கும் புரியவைத்து,
அண்ணல் நம்பெருமானார் (ஸல்..) அவர்களின் வாழ்வியல் வழிகளை பின்பற்றி்நடந்திட வல்ல அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் தௌஃபீக் செய்வானாக !
#ஆமீன்...
👇👇👇👇👇👇👇👇👇
No comments:
Post a Comment