Monday, January 2, 2012

இன்று வலிப்பு நோய் தினம் : இந்தியாவில் 60 லட்சம் பேர் பாதிப்பு! பதிவு செய்த நாள் : 11/17/2011 12:49:26 AM மாற்றம் செய்த நாள்: 11/17/2011 10:04:43 AM

திருச்சி : உலக வலிப்பு நோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு இந்நோய் பாதிப்பு உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்களில் முக்கியமானது வலிப்பு நோய். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் 8.7 பில்லியன் பேருக்கு இந்நோய் பாதித்துள்ளது. இதன் எண்ணிக்கை வரும் 2017ல் 9 பில்லியனை தாண்டும் எனவும், இந்தியாவில் தற்போது சுமார் 60 லட்சம் பேரும், தமிழகத்தில் 3.5 லட்சம் பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்று உலக வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இதுபற்றி திருச்சி அரசு மருத்துவமனை துணை முதல்வரும், மூளை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணருமான டாக்டர் அலீம் கூறியதாவது: நாடா புழுக்கட்டிகள் மற்றும் காசநோய் கிருமிகள் மூளையை தாக்குவதால் ஏற்படக்கூடிய வலிப்பு நோய்கள் தான் தமிழகத்தில் அதிகம். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் வலிப்பு நோய் ஏற்படும். போதை, மது, தலைக்காயம், மூளைக்கான ரத்தக்குழாய் மாற்றம் ஆகியவற்றாலும் வலிப்பு ஏற்படலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்களின் உறவினர்கள் மூளை வரைபடத்தை (இ.இ.ஜி) பார்த்தபோது அவர்களுக்கு வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் 6 மடங்கு அதிகமாக உள்ளது. இதனடிப்படையில் வலிப்பு நோய் பரம்பரை நோயாக தோன்றலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வலிப்பு நோய் பகல் நேரத்தில் 42 சதவீதம் பேருக்கும், இரவு நேரங்களில் 24 சதவீதம் பேருக்கும், சிலருக்கு தூங்கும்போதும் ஏற்படுகிறது.

வலிப்பு நீக்கி மருந்துகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணமடைய முடியும். முறையாக சிகிச்சை பெறுபவர்களில் 60 முதல் 80 சதவீதம் பேருக்கு வலிப்பு நோய் தடுக்கப்படுகிறது. இந்நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியதில்லை. 3 ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். வலிப்பு நோய் உள்ளவர்கள் தாரளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு டாக்டர் அலீம் கூறினார்.

பாதிக்கப்பட்டோர் தவிர்க்க வேண்டியவை
ச் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதையோ, உயரமான இடங்களிலோ, ஆபத்தான இயந்திரங்களிலோ, நீருக்கு அடியிலோ வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் வலிப்பு நோய் ஏற்பட்டவர்களின் அருகில் கூரான கற்கள் மற்றும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் இரு தாடைகளுக்கும் இடையில் பற்களையும், நாக்கையும் பாதிக்காத வகையில் சுவாசத்திற்கு இடையூறு இல்லாத வகையில் கர்சீப் வைக்கலாம்.
ச் தரையில் விழுந்தவுடன் ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உமிழ்நீர், எச்சில் போன்றவை மூச்சுக்குழல் வழியாக சென்று மரணம் ஏற்படுத்துவதை தடுக்க முடியும்.
ச் வலிப்பு நோயால் துடிக்கும் நபரிடம் சாவிக்கொத்து, கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை கொடுக்கக்கூடாது.

Dinakaran

No comments:

Post a Comment