Tuesday, January 24, 2017

Our Humble simple Chief Minister O.Pannerselvam

*முதல்வர்க்கு நன்றி**!

அசத்துகிறார் முதல்வர்...
பரவாயில்லையே என்று எதிர்கட்சிகள் கூட கவனித்து வருகின்றன.
மாணவர் போராட்டத்தினை ஆரம்பித்திலேயே அடக்குமுறை செய்திருக்கலாம்.அவர் மீது தனிப்பட்ட முறையில் வீசப்பட்ட கோஷங்களையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல் மாணவர் உணர்வுக்கு மதிப்பளித்து பேச்சு வார்த்தைக்கு அமைச்சர்களை அனுப்பிய பண்பு.

. துளி கூட ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்ய வேண்டியதை செவ்வனே டெல்லி வரை சென்று அங்கேயே முகாமிட்டு பிரதமரின் நன்மதிப்பைப் பெற்று நிலைமையை எடுத்துக் கூறி அவசர சட்டம் இயற்றி வெற்றியுடன் திரும்பிய முயற்சி.

அவசர சட்டம் நல்ல முறையில் நடந்தேறியதற்கு பிரதமருக்கும் மாணவர்களுக்கும் வாயார பாராட்டு தெரிவித்த மாண்பு.

.அறிவித்தபடி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தச் சென்ற போது மாணவர்கள் மறுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு உங்களைப் போன்ற மீடியா நண்பர் கேட்டுக்கொண்டதால் ஜல்லிக்கட்டு துவங்கி வைப்பேன் என்றேன் ....  மக்கள் விரும்பும் போது அது நடக்கட்டும் என்று ஈகோ இல்லாமல் இயல்பாய் விமர்சனத்தைப் புறந்தள்ளிய லாவகம்.

இத்தனை கடின முயற்சிக்கும் பாராட்டு கிடைக்கா விட்டாலும் தன் கடமையைச் செய்வதில் காட்டும் அக்கறை.

உங்களை சமூக வலை தளங்களில் மிச்சர் என்று கிண்டல் செய்கிறார்களே என்று கேட்ட கேள்விக்கு பொது வாழ்வு என்று வந்து விட்டால் விமர்சனம் எல்லாம் இருக்கத்தான் செய்யும் என்று அசால்டாக பதில் அளித்தது.
                 .ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் சார்பாக.
               எளிமையான மனிதர் மட்டுமல்ல **ஈகோ*** இல்லா பொறுமையான மனிதரும் கூட!!!
                      நான்கு பேரை அழைத்து வந்து அலங்காநல்லூரில் ஜல்லிகட்டை நீங்கள் நடத்தியிருக்க முடியும் உங்களால்...
                       ஆனால் அதே சிரித்த முகத்தோடு திரும்பி போனீர்கள்.கொஞ்சம் நெஞ்சம்  வலிக்கத்தான் செய்தது.
               வட்ட செயலாளர்களே வம்பு செய்யும் போது ... நீங்கள் தமிழக முதல்வர்; காவல்துறை அமைச்சர் என்ற போதும் அமைதி காத்தது ஆனந்தமே தமிழனுக்கு!!!
                   
                    எதிர்கட்சிகளின் சதி என்று சொல்லாத உண்மையான மக்கள் முதல்வர்.
              உங்களால் இயன்றதை செய்துள்ளீர்கள்.இதை தவிர தமிழக முதல்வர் என்ற வகையில் செய்வதற்கு ஏதும் இல்லை என்பதை சட்ட வல்லுனர்கள் அறிவார்கள்.
                    மாணவர்கள் உங்களை தோற்கடித்ததாக நான் கருதவில்லை;மக்களுக்காக விரும்பியே நீங்கள் ...
            

இதை எல்லாம் யாரும் முதல்வரிடம் எதிர் பார்க்கவில்லை.
அரசியலில் மேதாவிகளை விட எளிமையானவர்களே வெற்றி பெற்றுள்ளனர் என்பதே வரலாறு.
மொத்தத்தில் இந்த பிரச்சனையை ஓபிஎஸ் அவர்கள் கையாண்ட விதம் அருமை.

முதல் சுற்றில் வெற்றி உங்களுக்கே.. *வாழ்த்துக்கள்** ஓபிஎஸ் அவர்களே.

2 comments:

  1. https://sites.google.com/view/movers-riyadh/movers-burydah
    https://sites.google.com/view/movers-riyadh/movers-tabuk
    https://sites.google.com/view/movers-riyadh/movers-hail
    https://sites.google.com/view/movers-riyadh/movers-khamis-mushait

    ReplyDelete
  2. https://sites.google.com/view/movers-riyadh/jeddah
    https://sites.google.com/view/movers-riyadh/ahsa
    https://sites.google.com/view/movers-riyadh/cleaning-mecca

    ReplyDelete