Tuesday, December 17, 2024

A poem about my milestones of Achievement and Honour 17.12.2025

அலீம் அவர்கள் 
அடுக்கடுக்காக
அள்ளிக் கொண்டிருக்கிறீர்
அளப்பறிய சாதனைகளால்
அவார்டுகளை

அள்ளியதை
அடுக்கி வைக்க
அலமாரிகள்
அதிகம் தேவைப்படுமே

அலீம் என்றாலே
அளவில்லா பட்டம் என்ற
அங்கீகாரமோ

அல்லாவின்
அன்பும் அருளும் தான் என
அறிவேன் அலீம். சற்றே சிறு
அளவுலாவுதல் அலீமுக்காக
அவ்வளவுதான்

அகரத்தினால் சிகரம்தொட்ட
அலீம்பாயை அல்லாவின்
அருளோடு  ஒரு
அர்ச்சனை
அவ்வளவுதான்

அள்ள வேண்டும் இன்னும்என
அருளாசி கூறி
அமைகிறேன்

- தேன் மொழி

No comments:

Post a Comment