Saturday, July 27, 2019

Tiruchirappalli International Airport New Terminal Model LEAF Award

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் முனைய கட்டுமான வடிவமைப்பானது (Design) உலகப்புகழ் பெற்ற "முன்னணி ஐரோப்பிய கட்டிடக்கலை  குழுமம் விருதுகள் - Leading European Architecture Forum - LEAF Awards என்ற விருதிற்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முதன்முறையாக இவ்விருதிற்கு போட்டியிடும் வடிவமைப்பு என்ற புகழைப் பெற்றுள்ளது.

தற்போது கட்டப்பட்டு வரும் கட்டுமான திட்டங்கள் (Projects Under Construction) என்ற பிரிவில் உள்ள எதிர்கால திட்டங்கள் (Future Project) என்ற வகைப்பாட்டில் போட்டியிட இருக்கிறது. இது இந்த கட்டுமானத்தின் வடிவமைப்பாளரான,
லண்டனைச் சேர்ந்த சிறப்புக்கட்டுமானத்திற்கான உலகின் முன்னணி வடிவமைப்பாளரான "பாஸ்கல் + வாட்சன்" நிறுவனத்தாரால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
இறுதி முடிவுகள் வரும் அக்டோபர் கடைசி வாரத்தில் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் வருடாந்திர விழாவில் அறிவிக்கப்படும்.
முன்னணி ஐரோப்பிய கட்டிடக்கலை  குழுமம் விருதுகள் - Leading European Architecture Forum - LEAF Awards என்ற விருது வழங்கும் விழாவானது கடந்த 2001ல் இருந்து நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வரவிருக்கும் புதிய பயணிகள் முனையத்தின் வடிவமைப்பானது ஏற்கனவே,
உலகப்புகழ் பெற்ற,
ஒவ்வொரு வருடமும் லண்டனில் நடக்கும் இந்த வருடத்திற்கான "உலக கட்டிடக்கலை செய்தி விருதுகள் 2018 போக்குவரத்து - எதிர்கால திட்டங்கள்"
(World Architecture News (WAN) Awards 2018 Transport - Future Project) வரிசையில் போட்டியிட,
பாஸ்கல் வாட்சன் நிறுவனத்தால் தேர்ந்தெடுத்து அனுவ்பப்பட்டது.
நவம்பர் - 2018ல் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளில் அமெரிக்காவின் "ஸால் வெகாஸ்" விமானநிலைய வடிவமைப்பு பரிசைத் தட்டிச்சென்றது.
இந்தியாவில் இருந்து முதன்முறையாக இவ்விருதிற்கு போட்டியிட்ட வடிவமைப்பு என்ற புகழைப் பெற்றதோடு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய வடிவமைப்பு திருப்திபெற வேண்டியதாயிற்று.

இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமமானது, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இங்கு இந்தியாவின் இரண்டாம்நிலை நகரங்களின் விமானநிலையங்களின் முன்மாதிரி (Model) விமானநிலையமாக,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தினை தேர்ந்தெடுத்து புதிய பயணிகள் முனையத்தை கட்டும் பூர்வாங்க பணிகளைத் தொடங்கியுள்ளது. கட்டுமான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றது.
இந்த புதிய பயணிகள் முனையத்தின் வடிவமைப்பை, இதற்கென்றே உள்ள உலகின் முன்னணி வடிவமைப்பாளரான "பாஸ்கல்+வாட்சன்" நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு,
இந்த புதிய பயணிகள் முனையத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை, இதற்கெனவே பிரயத்யோகமாக உள்ள உலகின் முன்னணி நிறுவனமான, பிரான்ஸ்  நாட்டைச் சேர்ந்த "ஈஜிஸ-egis" நிறுவனம் ஒருங்கிணைக்க உள்ளது.
அதேபோல் இந்த புதிய பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை உலகின் முன்னணி சிறப்புக்கட்டுமானங்களுக்கான புகழ்பெற்ற, இத்தாலி மற்றும் தாய்லாந்து கூட்டு நிறுவனமான "ITD" நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி இதற்கான முப்பரிமாண படம் (Miniature) வெளியிடப்பட்டு, அதே மாதம் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது.
வரும் அக்டோபர் 2021ற்குள் புதிய பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து புதிய பயணிகள் முனையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில்,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் புதிய பரிணாமத்தைப் பெறும் என்பது உறுதி!

1 comment:

  1. Do you need Personal Loan?
    Business Cash Loan?
    Unsecured Loan
    Fast and Simple Loan?
    Quick Application Process?
    Approvals within 4 Hours?
    No Hidden Fees Loan?
    Funding in less than 72hrs
    Get unsecured working capital?
    Email us: fastloanoffer34@gmail.com
    Whats-app us on +918929509036

    ReplyDelete