Wednesday, October 3, 2018
http://www.cockroachcreations.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/
மகாத்மாவின் எவரெஸ்ட் சிகரம் என்று அழைப்போம் பிரதமருக்கு திருச்சி நரம்பியல் நிபுணர் வேண்டுகோள்
டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய நரம்பியல் பேராசிரியரும், தமிழகம், பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்கள் அசோசியேசன் முன்னாள் தலைவரும், திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லுாரி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை முன்னாள் துணை முதல்வருமாக இருந்தவர் நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம்.
தற்போது, நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளோம். அவரை போற்றும் வகையிலும், 150 பிறந்த தினத்தை கொண்டாடும் வகையிலும், இமய மலையின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை, மகாத்மாமாவின் எவரெஸ்ட் சிகரம் என்று அழைக்க வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment